தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்களும் அழகு தரும் குணங்களும் ஏற்கனவெ அறிந்ததுதான். இதை உள்ளுக்குள் எடுத்துகொள்வதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கியம் கிடைப்பது போலவே கூந்தலுக்கும் சருமத்துக்கும் கூட பல அற்புதங்களை செய்து வருகின்றன. கூந்தலுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து நிறைவாக இருந்தால் கூந்தல் வளர்ச்சியில் குறையில்லாமல் நீண்டு வளரும். நீளமான கூந்தல் வேண்டும் என்பவர்கள் தலைக்கு செம்பருத்தி ஹேர் பேக் பயன்படுத்தினால் கூந்தல் வனப்பாகவே இருக்கும். நெல்லி சாறு நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. இது கூந்தல் வளர்ச்சியில் அபரிமிதமான பங்கு கொடுக்ககூடியது. இது கூந்தல் பிரச்சனைகளான வறட்சி, உதிர்வு, மெலிவு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்ககூடியது. குறிப்பாக கூந்தலில் உண்டாகக்கூடிய இளநரையை தடுக்க உதவக்கூடியது. இளவயது முதலே நெல்லிக்காயை கூந்தலுக்கு பயன்படுத்தினால் நரைமுடி பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். நெல்லிசாறு பயன்படுத்தி ஹேர்டை தயாரிக்கும் முறை குறித்து பார்த்தோம். நெல்லிக்காயை கூந்தலுக்கான எண்ணெய் காய்ச்சுவதற்கும், ஹேர்டை பயன்பாட்டுக்கும் பயன்படுத்திவருவது போன்று கூந்...