Recent Update

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

Image
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   

சூரிய கிரகணம் 2020: பொன் வளையம் போல மின்னப்போகும் சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நாள், நேரம், அதன் சிறப்பம்சம் இதோ

solar eclipse

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும். இந்த கிரகணம் பற்றி மேலும் அறிவோம்...

பிரகாசமான வளையம் போல ஜொலிக்க இருக்கும் சூரியன்

இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் முதல் சூரிய கிரகணம் வரும் ஜூன் 21ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிகழ்வைப் பார்க்க உலகம் முழுவதும் ஆவலுடன் இருக்கிறது. ஜோதிடத்தின் படி, கொரோனா தொற்றுநோய் 2019 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்திலிருந்து தொடங்கி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தில் முடிவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் முதல் சூரிய கிரகணம் நடக்கும் போது, சூரியன் ஒரு பிரகாசமான வளையத்தைப் போல இருக்கும். இந்த கிரகணம் தொடர்பான பிற முக்கிய விஷயங்களை அறிந்து கொள்வோம் ..

கிரகணம் இந்தியாவில் எப்படி தெரியும்?

இந்த கிரகணம் உலகின் பல நாடுகளில் காண முடியும். பூமி - சந்திரன் - சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் சூரியனின் 99 சதவீதத்தை மறைக்கக் கூடும். சூரியனை நடுவில் சந்திரனின் நிழல் விழுவதால் பார்க்க ஒரு பொன் வளையம் போல ஜோலிக்கும்.

எந்த இடங்களில் எல்லாம் பார்க்க முடியும்?

சூரியனின் ஒரு பகுதியை சந்திரனின் நிழல் மறைக்கும் போது பகுதி சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதுவே சூரியன் முழுவதுமாக மறைக்கப்பட்டால் பூரண அல்லது முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

இந்த கிரகணம் இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பார்க்க முடியும். இந்தியாவின் வடக்கு பகுதியில் மோதிர வடிவத்தில் காணமுடியும் என்று நம்பப்படுகிறது. மறுபுறம், இது டெல்லி, சண்டிகர், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் ஓரளவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கிரகணம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் பெரும்பாலான பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் என பகுதிகளில் பார்க்க முடியும்.

Comments