Recent Update

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

Image
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   

புதுக்கோட்டை: வதந்தியால் ஹெலிகாப்டரையே 'கொளுத்திய' நெட்டிசன்ஸ்!

helicopter crash

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலங்களில் வதந்தி பரவுவது இயற்கையே. செய்தியின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த முடியாத சூழல் இதற்கு முன்னர் இருந்தது. ஆனால் தகவல் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்தில் முன்பை விட மிக வேகமாக வதந்திகள் றெக்கை முளைத்து பறக்கின்றன.

இப்படியான ஒரு வதந்தி இன்று காலை முதல் பரவியது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே மேலவசந்தனூர் பகுதியில் காலை 10 மணிக்கு சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று அதிக சத்தத்துடன் பறந்துள்ளது. அதன்பின்னர் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் வேலி மரங்கள் 2 ஏக்கர் பரப்பளவில் எரிந்தன.

ஹெலிகாப்டர் வெடித்து சிதறிவிட்டதாக அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் அந்தப் பகுதியில் குவியத்தொடங்கினர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி இளைஞர்கள் என்ன நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்தபோது கண்மாயில் வேலி மரங்கள் தீ எரிந்ததை மட்டுமே பார்த்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்ததற்கான எந்த தடயங்களும் இல்லை.


இந்நிலையில் இந்த தகவலை சிலர் சமூக வலைதளங்களில் சிலர் திரித்து பதிவேற்றியுள்ளனர். கலிபோர்னியாவில் நடைபெற்ற வேறொரு ஹெலிகாப்டர் விபத்து பற்றிய புகைப்படங்களை பதிவேற்றி புதுக்கோட்டையில் நடந்ததாக திரித்துக் கூறியுள்ளனர்.

Comments